வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
ஹிந்தியில் வெளிவந்த படம் உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக். விக்கி கவுசல், யாமி கவுதம், பிராஷ் ராவல், மோகில் ரெய்னா, கீர்த்தி குல்ஹரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஷாத்வாத் சச்தேவ் இசை அமைத்திருந்தார், மிதேஷ் மிர்ச்சாண்டனி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆதித்ய தார் இயக்கி இருந்தார்.
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலை மையமாக கொண்ட படம். இந்த படத்தில் நடித்த விக்கி கவுசல் சிறந்த நடிகராகவும், இயக்கிய ஆதித்யா தார் சிறந்த இயக்குனராகவும், சிறந்த ஒலிப்பதிவாளராக பிஷ்வதீப் சட்டர்ஜியும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளாராக ஷாவத் சச்தேவ் ஆகியோருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இதனால் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று மற்ற மொழி மக்களும் ஆர்வம் காட்டினர். இதையொட்டி இந்தப் படத்தை ஜீ5 நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது, இந்தியில் தயாரான இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளது.