Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டா?: ப்ரியங்கா மீது பாக்., பெண் குற்றச்சாட்டு

12 ஆக, 2019 - 18:50 IST
எழுத்தின் அளவு:
Pakistan-girl-slams-Priyanka-chopra

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை கடந்தாண்டு திருமணம் செய்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நான் உங்கள் ரசிகை; உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் என சொல்லி விட்டு, ப்ரியங்கா சோப்ராவிடம் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியைக் கேட்டார்.

அந்தப் பெண் கேட்ட கேள்வி: பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன. அப்போது, இந்திய பாதுகாப்புப் படைக்கும், ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். யுனிசெப்பின் அமைதிக்கான நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், போருக்கு ஆதரவு தெரிவிக்கலாமா...? இது உங்களின் நடுநிலைமையா? உங்களையும், உங்கள் படங்களையும் நாங்கள் ரொம்பவே ரசிக்கிறோம்; நேசிக்கிறோம். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அணு ஆயுத நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பது சரியல்ல என கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ப்ரியங்கா சோப்ரா: பாகிஸ்தானில், எனக்கு அதிக நண்பர்கள் உண்டு. நான் ஒரு போதும் போரை ஆதரிப்பவர் அல்ல; போரைத் தூண்டவும் மாட்டோம். அதே நேரம், நான் ஒரு இந்தியர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால், இந்திய நாட்டின் மீது தேச பக்தி இருக்கிறது. இதற்காக, என்னை நேசித்த, நேசித்து கொண்டிருப்பவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். நாம் அன்பு செலுத்தவே இங்கு உள்ளோம். இருப்பினும், இப்படியொரு கேள்வியை கேட்ட உங்களுக்கு என்னுடைய நன்றி.

இவ்வாறு ப்ரியங்கா சோப்ரா பதில் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தொடர்ந்த மிரட்டல்கள்: டுவிட்டர் கணக்கை மூடிய அனுராக்தொடர்ந்த மிரட்டல்கள்: டுவிட்டர் ... 4 தேசிய விருது பெற்ற உரி : தமிழ், தெலுங்கில் வெளியானது 4 தேசிய விருது பெற்ற உரி : தமிழ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram Sekar - mumbai ,இந்தியா
13 ஆக, 2019 - 18:34 Report Abuse
Ram Sekar பாக் பக்கிகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை தினமலரே
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
12 ஆக, 2019 - 21:17 Report Abuse
Tamilachi பாக் பக்கிகள் பயங்கர வெறி புடிச்சு கடுப்புல யார கடிக்கலாம்னு அலயுதுங்க.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in