வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
பாலிவுட்டின் வசூல் நாயகனாக இருக்கும் ஷாரூக்கான், கடந்த ஐந்து வருடங்களாக வசூல் சாதனை படைக்கும் படங்களைக் கொடுக்கவில்லை. அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. 'ஹேப்பி நியூ இயர், தில்வாலே, பேன், டியர் ஜிந்தகி, ரயீஸ், ஜப் ஹர்ரி மெட் செஜல், ஜீரோ' ஆகிய படங்களில் ஒரு சில படங்கள் மட்டும்தான் சுமாரான வெற்றியைப் பெற்றன. கடைசியாக வந்த 'ஜீரோ' படம் கூடத் தோல்வியைத் தழுவிய படம் தான்.
அந்தப் படம் வெளிவந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் வேறு எந்தப் புதுப்படத்திலும் ஷாரூக்கான் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தனக்கு சரியான கதைகள் அமையவில்லை என்றும் அதனால் ரசிகர்களிடம் கதை கேட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அடுத்து ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், யாருமே எனக்கு ஆக்ஷன் கதைகளை எழுத மறுக்கிறார்கள். எனவே, எனக்காக யாராவது ஆக்ஷன் கதைகளை எழுதினால் அதை வரவேற்கிறேன். என்னுடைய டுவிட்டரில் பதிவிடவும். நான் அனைத்தையும் படிப்பேன். இரு வரிகளில் கதையை எழுதின அனுப்புங்கள்,” எனக் கேட்டுள்ளார்.