சகோதரியை இழந்தார் நவாசுதீன்: திரையுலகம் ஆறுதல் | வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! |
ஒரு ஆண்டுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் ராணு மோண்டால். லதா மங்கேஷ்கரின் பாடலை சுருதி சுத்தமாக அவர் பாடியதை ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற, ஓவர் நைட்டில் பிரபலமானார் ராணு.
அதன் பிறகு இசை நிகழ்ச்சிகள் நடத்தும் இந்தி சேனல் ஒன்று அவரை அப்படியே அள்ளிக் கொண்டுபோய் பியூட்டி பார்லரில் விட்டது. அங்கிருந்து அழைத்துச் சென்று மேடையில் பாட விட்டது. ராணு தொழில்முறை பாடகி ஆனார்.
இப்போது அடுத்த கட்டம், பாடகரும், இசை அமைப்பாளருமான சங்கர் மகாதேவன் அவரை பாலிவுட்டில் பாடகி ஆக்கிவிட்டார். அவர் இசை அமைக்கும் படம் ஒன்றில் ஒரு பாடலை பாடியிக்கிறார் ராணு.
இதுகுறித்து ராணு சொல்வது ஒரே வாக்கியம்தான். "கடவுள் எப்படி வாழச் சொல்கிறாரோ, அப்படியே வாழ்கிறேன்" என்பதாகும்.