நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் பத்து நாட்களுக்கு முன்பு தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'டியர் காம்ரேட்'. 'கீதா கோவிந்தம்' ஜோடி மீண்டும் சேர்ந்த காரணத்தால் படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் எதிர்பாராத தோல்வியை அடைந்தது.
'டியர் காம்ரேட்' படம் வெளியாவதற்கு முன்பே அதன் ஹிந்தி உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கினார் பிரபல ஹிந்தி இயக்குனர் கரண் ஜோஹர். அதோடு படத்தையும் பிரமாதம் எனப் பாராட்டினார். இருப்பினும் அவருடைய கணிப்புகள் பொய்யாகின.
படத்தின் ரீமேக்கில் நடிக்க ஷாகித் கபூரை அணுகியிருக்கிறார். அவர் படத்தின் ரிசல்ட் என்ன என்று தெரிந்த பின் நடிக்க மறுத்துவிட்டார். வேறு ஹீரோவை வைத்து எடுக்கலாமா அல்லது படத்தை ரீமேக் செய்வதையே தள்ளி வைக்கலாமா என கரண் குழப்ப்த்தில் இருக்கிறாராம்.