நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா, தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. லிங்கா படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இவர், சமீபத்தில் வால்மீகி சமாஜம் என்கிற அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனால் வால்மீகி சமாஜம் அமைப்பை சேர்ந்தவர்களும் மற்றும் வேறு சில எதிர்ப்புக் குழுவினரும் இதற்காக சோனாக்ஷி சின்கா மீது வழக்கு பதியுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சோனாக்ஷியின் உருவ பொம்மையையும் எரித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரிதாவதை உணர்ந்த சோனாக்ஷி சின்ஹா, தான் வால்மீகி சமாஜம் குறித்து பேசிய கருத்துக்கள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது டுவிட்டர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.