விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
தமிழ் சினிமாவில் தான் முந்தைய வெற்றிப் படங்களின் கதையைக் காப்பியடித்து இந்தக் காலத்திற்கேற்ப கதையைக் கொஞ்சம் மாற்றி படங்களை எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால், தெலுங்கிலும் அப்படிப்பட்ட இயக்குனர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்.
அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'டியர் காம்ரேட்' படம் தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி இயக்குனர் கரண் ஜோஹர் கடந்த வாரம் வாங்கினார். இப்போது அவர் வாங்கிய விலை எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது. சுமார் 6 கோடி கொடுத்து ரீமேக் உரிமையை அவர் வாங்கியுள்ளாராம். இந்தத் தொகை அதிகம் என்றே சொல்கிறார்கள்.
படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்களோ, தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி 30 வருடங்கள் முன்பு நாகார்ஜுனா, அமலா நடித்து வெளிவந்த 'உதயம்', 35 வருடங்களுக்கு முன்பு தமிழில் கார்த்திக், ரேவதி, மோகன் நடித்து வெளிவந்த 'மௌனராகம்', கார்த்திக், ரேவதி நடித்து 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'இதய தாமரை' ஆகிய படங்களின் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அட்லீயின் முந்தைய வெற்றிப் படங்களைத் தழுவி படத்தை உருவாக்கும் பார்முலா தெலுங்கு இயக்குனர்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது போலிருக்கிறது.