Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தியாவின் கவுரவத்தை இழிவுபடுத்துவதா: கங்கனா உள்ளிட்ட 61 பிரபலங்கள் போட்டி அறிக்கை

27 ஜூலை, 2019 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Kangana-and-60-celebrities-oppose-statement

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், தமிழ் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய ஒரு கடிதத்தை அறிக்கையாக வெளியிட்டனர். அந்த அறிக்கையில் நாட்டில் மதவெறி அதிகரித்திருப்பதாகவும், இதனால் கொலைகள், வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் இதை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணவத், பல்லவி ஜோஷி உள்ளிட்ட 62 பிரபலங்கள் கையெழுத்திட்டு ஒரு போட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலை 23 ஆம் தேதி பிரமருக்கு எழுதிய கடிதம் ஒன்று எங்களை கோபம் கொள்ளச் செய்தது. 49 பேர் எழுதிய அந்த கடிதத்தில், அரசியல் சார்பும் தனிப்பட்ட முறையிலான நோக்கமும் இருந்தன. இது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்மறையாக சித்தரிக்கும் என்று நினைக்கிறோம். இன்று கடிதம் எழுதுபவர்கள் முன்னர் நக்சல் அமைப்பினரும், பழங்குடியினரும் விளிம்புநிலை மனிதர்களைத் தாக்கியபோது அமைதியாக இருந்தனர். பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்தனர்.

ஜெய் ஸ்ரீராம் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் கவுரவத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், பிரதமரின் நிர்வாக முறையை எதிர்த்தும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொலைகளை தடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளது. அவர்களை கண்டிப்பதை விட்டுவிட்டு மத்திய அரசை குறை சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. கொலை மனப்பாண்மை நீங்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா உடன் நடிக்க விரும்பும் ஜான்விவிஜய் தேவரகொண்டா உடன் நடிக்க ... ஹாலிவுட்டே சரி; இந்தி பட உலகை எரிச்சல்படுத்தும் ராதிகா ஆப்தே ஹாலிவுட்டே சரி; இந்தி பட உலகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

28 ஜூலை, 2019 - 11:54 Report Abuse
போலிஅறிவு மேடம், நம்ம நாட்ல போலி அறிவுஜீவிகளுக்கு இந்துமதத்தை ஏதாவது நொட்டை சொல்லாமல் தூக்கமே வராதுன்னு தெரியாதா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in