Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அதிக சம்பளம் கேட்கும் தபு

17 ஜூலை, 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Tabu-asking-more-salary

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையைளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்த சீனியர் நடிகை தபு. தமிழில் 1996ல் வெளிவந்த 'காதல் தேசம்' படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து 'இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் 1991ல் வெளிவந்த 'கூலி நம்பர் 1' படத்தில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் அவர் குறிப்பிடத்தக்க பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தெலுங்குப் படங்களில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தபுவை நடிக்கக் கேட்டனர். அவரும் நடிக்க சம்மதித்தார். ஆனால், அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். ஐம்பது வயதை நெருங்கினாலும் தபுவைத் தேடி பல நல்ல வாய்ப்புகள் வருவதால் அவர் பிஸியாகவே உள்ளார்.

ஹிந்திப் படங்களில் வாங்கும் அளவிற்கு தெலுங்குப் படத்திற்காகவும் கேட்டுள்ளார். இருப்பினும் தயாரிப்பாளர்கள் தரத் தயாராக இருக்கிறார்களாம். இந்தியத் திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் என பெயர் எடுத்தவர் தபு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படுக்கை அறை காட்சி லீக் : மீண்டும் பரபரப்பில் ராதிக ஆப்தேபடுக்கை அறை காட்சி லீக் : மீண்டும் ... சூப்பர் 30 படத்திற்கு வரிவிலக்கு சூப்பர் 30 படத்திற்கு வரிவிலக்கு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in