Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கேட்க மறுத்த கங்கனா

12 ஜூலை, 2019 - 15:35 IST
எழுத்தின் அளவு:
Kangana-refuses-to-say-apology

மும்பை: பத்திரிகையாளர்களை 50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் என தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'ஜட்ஜ்மென்டல் ஹை கியா?' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கங்கனா ரணாவத், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது மணிகர்ணிகா படத்தைப் பற்றி தவறாக விமர்சனம் எழுதியதாக பத்திரிகையாளர் ஒருவரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து கங்கனா குறித்த செய்திகளைப் புறக்கணிக்கப் போவதாக பொழுதுபோக்குப் பத்திரிக்கையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக கங்கனா மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தேச நலனுக்கான செய்திகளை விடுத்து, தேவையில்லாத செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பதாக' அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, பத்திரிகையாளர்களை விலைக்கு வாங்க லட்சங்கள் தேவையில்லை என்றும், 50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் என்றும் கங்கனா விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினையை தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமாக கங்கனா செயல்பட்டு வருவது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
இதெல்லாம் நியாயம் தானா?இதெல்லாம் நியாயம் தானா? சோனாக்ஷி உள்பட 4 நடிகைகள் மீது மோசடி வழக்கு சோனாக்ஷி உள்பட 4 நடிகைகள் மீது மோசடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
13 ஜூலை, 2019 - 11:19 Report Abuse
Tamilachi பெரிய அரசியல் கட்சி தலைவர்களை பாத்தா பம்முறாதும் மற்றவர்களை கண்டால் குதர்க்கமான கேள்விகளை கேட்டு அவமானப்படுத்துவதும் உண்மை தானே...
Rate this:
13 ஜூலை, 2019 - 10:06 Report Abuse
Kalyanaraman உண்மையைத்தான் சொல்லியுள்ளார்.
Rate this:
Aathavan - chennai,இந்தியா
13 ஜூலை, 2019 - 08:20 Report Abuse
Aathavan பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் யோக்கியர்கள் அல்ல. இவர் கருத்துக்கு பதில் சொல்ல யாராவது தயாரா ?
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
13 ஜூலை, 2019 - 06:40 Report Abuse
Subramanian Arunachalam selvi கங்கனா ஜெயலலிதாவாக நடிக்க போகிறார் . ஜெயலலிதாவை கண்டதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் பதுங்கி ஒடுங்கி இருப்பார்கள் . அதனால் தான் செல்வி கங்கனா பத்திரிகையாளர்களை மதிக்க வில்லை தற்கால பத்திரிகையாளர்கள் அனைவரும் பிரபல தலைவர்களை தவிர்த்து மற்றவர்களை அவமானப்படுத்துவதிலே குறியாக உள்ளனர் மேலும் மிரட்டி காசு பிடுங்குவதிலே வல்லவர்கள்
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
12 ஜூலை, 2019 - 19:07 Report Abuse
Bhagat Singh Dasan உண்மையை உரக்க சொல்லியுள்ளார், முதுகெலும்பு இல்லாத ஆண்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in