இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக் கான் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், அதுதான் உண்மை. அவர் கடைசியாக நடித்த 'ஜீரோ' படம் வெளிவந்து ஆறு மாதங்களாகிறது. இருந்தாலும் இன்னும் புதிய படம் எதிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. ஷாரூக் நாயகனாக நடித்த சில படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய படங்கள் தன் கைவசம் இல்லாதது பற்றி ஷாரூக் கூறுகையில், “இப்போது என்னிடம் எந்தப் படமும் இல்லை. இப்போதைக்கு புதிய படம் செய்யும் எண்ணமில்லை. இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போடலாம் என நினைக்கிறேன். படங்களைப் பார்க்க வேண்டும், கதைகளைக் கேட்க வேண்டும், புத்தகங்கள் படிக்க வேண்டும். என் மகள் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். மகன் படிப்பை முடிக்க உள்ளான். என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என நினைக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தில் ஷாரூக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளன. 'ஹே ராம்' படத்திற்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் ஷாரூக் நடிக்கவில்லை. அதனால், 'பிகில்' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.