Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உதவியாளரின் உடலை சுமந்து சென்ற அமிதாப்

13 ஜூன், 2019 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-emotional-post-after-his-secretary-Sheetal-Jain-death

கடந்த இரு நாட்களாக இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வைரலாக பரவிய படம் அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் ஒரு உடலை சுமந்த செல்லும் படம். அது அமிதாப் பச்சனிடம் உதவியாளராக இருந்த ஷீத்தல் ஜெயினின் உடல்.

அமிதாப்பச்சனிடம் 40 ஆண்டுகளாக தனி உதவியாளராக இருந்தவர் ஷீத்தல் ஜெயின். இவர் தனது 77வது வயதில் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கில் அமிதாப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஷீத்தல் ஜெயின் உடலை அமிதாப்பச்சனும், அபிஷேக் பச்சனும் சுடுகாடுவரை சுமந்து சென்றனர். ஷீத்தலின் மரணம் குறித்து அமிதாப்பசன் தனது சமூகவலைதள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

40 ஆண்டுகளாக என் வேலைகளை சுமந்தவர் ஷீத்தல். மென்மையான மனிதர். கடின உழைப்பாளி. நேர்மைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர். அவரது இறுதி பயணத்தில் அவரை சுமந்து சென்றேன். எனது வாழ்க்கையில் எல்லா காலகட்டடத்திலும் என்னுடன் இருந்தவர். மருத்துவனையில் போராடி உயிரை விட்டார். அவர் என் குடும்பத்தில் ஒருவர். அவரது அர்ப்பணிப்பு, பக்தி, மென்மையான தன்மை இவற்றுக்கு நான் ரசிகனாக இருந்தேன்.

எனது குடும்பத்தின் சோதனைகளை அவர் தாங்கிக் கொள்ள மாட்டார். நாங்கள் செல்ல முடியாத நிகழ்ச்சிகளுக்கு எங்கள் சார்பில் அவரை அனுப்பி வைப்போம். அவர் எனக்காக வேலை செய்ததை வெளி உலகத்திற்கு காட்டிக் கொண்டதே இல்லை. நாங்கள் செய்த உதவிக்கு அவர் காட்டிய நன்றி அளவிடமுடியாதது. இதுபோன்ற மனிதர்கள் இப்போது கிடைப்பதில்லை. அவர் இல்லாததால் எங்கள் தினசரி வாழ்க்கையில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்2100 விவசாயிகளின் கடனை செலுத்திய ... மலையாள நடிகரை இந்தியில் அறிமுகப்படுத்தும் அனுராக் காஷ்யப் மலையாள நடிகரை இந்தியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

avs ramesh - Chennai,இந்தியா
13 ஜூன், 2019 - 15:55 Report Abuse
avs ramesh Really it is touching words from Mr. Amitab, and tears were out of my eyes. That is why he is still hero.
Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
13 ஜூன், 2019 - 12:32 Report Abuse
Ashanmugam தனது உதவியாளரின் பிணத்தை சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்திய இந்தி உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரின் நன்றி உணர்வு, மனித நேயம், மனிதாபிமானம், ஏற்றத்தாழ்வு இல்லா தங்க மனசு, பெருந்தன்மை, ஈகை உள்ளம், தன் வேலையாளியை ஒர் குடும்ப உறுப்பினராக எற்று கொண்ட வானத்தை போல மனம் படைத்த அமிதாப்பச்சனுக்கு நிகர் அமிதாப்பச்சன் என்றால் சொல்லாலும் எழுத்தாலும் எண்ணில் அடங்காது. இவரின் செயல்பாடு எல்லோருக்கும் ஒர் முன் உதாரணமாக அமையும். " வாழ்க அமிதாப்பச்சன் சிரஞ்சீவியாக வளர்க அவரின் பணி இந்திய மண்ணில்".
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in