Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

12 ஜூன், 2019 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Amitabh-bachchan-pay-2100-farmers-loan

பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன், பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் விவசாய கடனை செலுத்தி உள்ளார்.

இது குறித்து அமிதாப் பச்சன் தனது வலைதள பக்கத்தில் எழுதி உள்ள கட்டுரையில், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் சிலரின் வங்கி கடன்களை தான் செலுத்த உள்ளதாக அமிதாப் ஏற்கனவே கூறி இருந்தார். விவசாயிகளுக்கு அமிதாப் உதவுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு உ.பி.,யை சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களை அமிதாப் செலுத்தினார்.

மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அமிதாப், புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தான் நாட்டின் உண்மையான அரண்கள் எனவும் புகழ்ந்துள்ளார் அமிதாப்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அமிதாப் டுவிட்டர் ஹேக், உடனடி மீட்புஅமிதாப் டுவிட்டர் ஹேக், உடனடி மீட்பு உதவியாளரின் உடலை சுமந்து சென்ற அமிதாப் உதவியாளரின் உடலை சுமந்து சென்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

MURUGESAN SHANMUGAM - SALMIYA,குவைத்
13 ஜூன், 2019 - 10:51 Report Abuse
MURUGESAN SHANMUGAM மற்றவர்களுக்கு முன் உதாரணமானது தங்களுடைய செயர்க்காரிய செயல். பாராட்டுக்கள். மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அமிதாப்ஜி
Rate this:
sundara - tirunelveli,இந்தியா
13 ஜூன், 2019 - 09:11 Report Abuse
sundara Where is Mr Sabash Naidu ?
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
12 ஜூன், 2019 - 20:21 Report Abuse
K.P  SARATHI முதலில் இதை ரஜினிகாந்த் படிக்கவேண்டும் அவர் நினைத்தால் பல கிராமங்களை தத்தெடுக்கலாம் . இவரிடம் இருக்கும் பணம் புகழும் ஒருவருக்கும் பயன் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in