Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமிதாப் டுவிட்டர் ஹேக், உடனடி மீட்பு

11 ஜூன், 2019 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Amitabh-bachchan-twitter-hacked

இந்தியத் திரையுலகின் பெருமை மிகு நடிகரான அமிதாப்பச்சனின் டுவிட்டர் கணக்கை துருக்கி நாட்டைச் சேர்ந்த 'அயில்டிஸ் டிம்' என்ற குரூப் நேற்று இரவு ஹேக் செய்தது. உடனடியாக அதைக் கவனித்த அமிதாப்பச்சன் தரப்பினர், அது குறித்து மும்பை சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளித்தார்கள். உடனடியாக அமிதாப்பச்சனின் டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

ஹேக் செய்த குழுவினர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் சில வாசகங்களை அதில் இடம் பெறச் செய்தனர். அந்த டுவீட்டுகளும் உடனடியாக நீக்கப்பட்டன. இதன் மூலம் டுவிட்டர் கணக்குகள் மிகவும் பாதுகாப்பான முறையில் இல்லை எனத் தெரிய வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய சினிமா பிரபலத்தின் கணக்கையே இப்படி ஹேக் செய்தால் மற்ற கணக்குகளையும் எளிதில் ஹேக் செய்யலாமே. இதற்கு முன் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரின் டுவிட்டர் கணக்கும் கடந்த ஆண்டு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹேக் விவகாரம் குறித்து டுவிட்டர் இந்தியா தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூணம் பாண்டேயின் அதீத செயல்பாடு!பூணம் பாண்டேயின் அதீத செயல்பாடு! 2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப் 2100 விவசாயிகளின் கடனை செலுத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in