விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
இந்தியா முழுக்க பிரபலமான பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இருதினங்களுக்கு முன்னர் நடந்த மோடி பதவியேற்பு விழாவில் இவரும் பங்கேற்றார். வெளிநாட்டு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்ற இந்த விழாவில் இவர் பங்கேற்றுவிட்டு அங்கிருந்த கூட்டத்தால் வீடு திரும்ப முடியாமல் தனியாக தவித்து போய் உள்ளார். இவரின் நிலையை கண்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவர் வீடு செல்ல உதவி இருக்கிறார்.
இதுகுறித்து ஆஷா போஸ்லே டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது : பிரதமர் மோடி பதவியேற்பு விழா கூட்டத்தில் யாரும் இல்லாமல் தனியாக தவித்து கொண்டிருந்தேன். என் நிலையை கண்டு ஸ்மிருதி இரானி தான் உதவி செய்து என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். எல்லாவற்றிலும் அவர் அக்கறை காட்டுபவர். அதனால் தான் வெற்றி பெற்றுள்ளார் என பதிவிட்டு ஸ்மிருதி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.