பிரபாஸ் படத்தில் கமல் நடிப்பதாக தகவல் | கங்குலியின் பயோபிக் படத்தை இயக்குகிறாரா ஜஸ்வர்யா ரஜினி? | தெலுங்கில் ரீமேக்காகிய 'டெடி' | இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே : அனுஷ்கா ஷர்மா திடீர் முடிவு | தனுஷை இயக்கப் போகும் மரகத நாணயம் பட இயக்குனர் | ஆர்யா சொன்ன பிட்னஸ் ரகசியம் | ஐம்பதாவது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கும் அஞ்சலி | இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை : அண்ணன் சொல்கிறார் | 'வீரன்' மூலம் மீண்டும் 'மீசைய முறுக்கு'வாரா ஹிப்ஹாப் தமிழா ? | காதலன் படத்தை இப்படியா வெளியிடுவது... மலைக்கா அரோராவை விளாசும் ரசிகர்கள் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் காலா. மும்பை தாதாவாக ரஜினி நடித்த இந்த படத்தில் அவரது முன்னாள் காதலியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் நடிக்க அவர் முயற்சித்தபோதும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஹூமா, தற்போது ஆர்மி ஆப் தி டெட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜூலை மாதம் தொடங்கயிருக்கும் அந்த படத்தை ஜாக் ஸ்னைடர் இயக்குகிறார். ஜாம்பி வகையான கதையில் உருவாகும் இந்த படத்தில் டேவ் பாடி ஸ்டா, அனா டி லா ரெகுரா, எல்லா பெர்னல், தியோ ரோஸ்ஸி போன்ற சர்வதேச நடிகர், நடிகைகளும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் இப்படத்தில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன் என ஹூமாவும் தெரிவித்திருக்கிறார்.