Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துப்பாக்கி முனையில் நடிகையை திருமணம் செய்ய மிரட்டிய இளைஞர்

27 மே, 2019 - 15:20 IST
எழுத்தின் அளவு:
A-Man-threatens-Bhojpuri-actress-Ritu-Singh-with-a-pistol-forces-her-for-marriage

போஜ்புரி மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ரிது சிங். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரவு 11 மணிக்கு அவரது அறைக்குள் ஒரு இளைஞர் புகுந்துள்ளார். அப்போது கையில் துப்பாக்கியை நீட்டியபடி, என்னை திருமணம் செய்து கொள் இல்லையேல் சுட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரிது சிங் அலறியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் அங்கு சென்றபோது ஊழியர் ஒருவரின் கையில் அந்த இளைஞர் சுட்டிருக்கிறார். அதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டபோது அவர்களை நோக்கியும் அந்த இளைஞர் சுட்டதால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை கைது செய்துள்ளனர்.

அதையடுத்து பங்கஜ் என்ற அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த அதிர்ச்சி சம்பவத்தினால் தொடர்ந்து தன்னால் அங்கு நடிக்க முடியாது என்று ரிது சிங் சொல்ல, படக்குழு பேக்கப் செய்து விட்டு ஊர் திரும்பியிருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புதிய இயக்குனருடன் கைகோர்க்கும் ரன்வீர் சிங்புதிய இயக்குனருடன் கைகோர்க்கும் ... பிரியங்கா சோப்ராவைத் தொடர்ந்து விமர்சிக்கும் சல்மான் கான் பிரியங்கா சோப்ராவைத் தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
29 மே, 2019 - 09:55 Report Abuse
கல்யாணராமன் சு. பைவ் ஸ்டார் ஹோட்டல்னு சொல்றாங்க....எப்படி ரூம் பக்கம் விட்டாங்க ?? புரியலே ............
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
28 மே, 2019 - 18:32 Report Abuse
Sathish இவள் நடிகையா? கொடுமைடா சாமி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in