ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
கேன்ஸ் பட விழாவுக்கு சென்று திரும்பி இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மணிகர்னிகா படத்தில் தன்னுடன் நடித்த தாகர் சபீரின் வீட்டுக்கு தங்கை ரங்கோலி சந்தலுடன் சென்றிருக்கிறார். அங்கு, இப்தார் விருந்து நடந்தது. அதில் கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்தை போற்றியிருக்கிறார்.
இது குறித்து, கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது:
எல்லா மதங்களுமே போற்றக் கூடியவைதான். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும், ஒவ்வொருவிதமான கோட்பாட்டை பின்பற்றுகின்றனர். அந்த வகையில், வருடத்தில் ஒரு மாத காலம் இறைவனை நினைத்து, விரதம் இருப்பதை முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர். அது, ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் என்பது, அம்மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில், ரமலான் மாதமான இந்த மாதத்தில் நடக்கும் விரதத்திலும், அதைத் தொடர்ந்து நடக்கும் இப்தார் விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும் என, மணிகர்னிகா படத்தில் கூடவே நடித்த தாகர் சபீர் என்னை அவரது வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார். அதனால், அவர் வீட்டுக்குச் சென்றேன்.
அங்கே, அவர்களோடு சேர்ந்து விரதம் இருந்தேன். விரதத்தின் முடிவில் நடக்கும் இப்தார் விருந்துக்கான சமையலிலும் நான் கலந்து கொண்டேன். இது என் வாழ்வில் மறக்க முடியாதவை. இவ்வாறு கங்கனா கூறியிருக்கிறார்.