Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி

26 மே, 2019 - 14:23 IST
எழுத்தின் அளவு:
sri-reddy-tweets-on-pawan-kalyan-educational-qualification

ஆந்திராவில் கடந்த 2014ல் ஜன சேனா என்ற புதிய கட்சியைத் துவக்கி ஆட்சியைப் பிடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இருந்தார் நடிகர் பவன் கல்யாண். காங்கிரசில் இணைய வாய்ப்பு இருந்தும், அதை அவர் செய்யவில்லை. முதல்வர் பதவிதான் தன்னுடைய இலக்கு என சொல்லி, லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கட்சியை போட்டியிட வைத்தார்.

கட்சியின் தலைவரான பவனும், பீமாவரம், காஜுவாஹா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும், அவருக்கு படு தோல்வி. அவருடைய கட்சி சார்பில், ராஜோலு தொகுதியில் போட்டியிட்ட வரப் பிரசாத் ராவ் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில், பவன் கல்யாண் படிப்பறிவில்லாதவர்; அவர் பத்தாம் வகுப்பு கூட தேறவில்லை. அவர் வைத்திருக்கும் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என, நடிகை ஸ்ரீ ரெட்டி, பவன் கல்யாண் குறித்து, ட்விட்டரில் கடுமையாக பதிவிட்டிருக்கிறார்.


அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:


உலகம் முழுவதும் தனக்காக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பவன் கல்யாண். அவர் திடுமென அரசியலுக்குப் போனதும், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். அவர் நடிக்கவில்லை. தேர்தல் முடிந்ததும், தான் முதல்வர் ஆகி விடுவோம் என பவன் கல்யாண் நம்பிக் கொண்டிருக்க, அவரது ரசிகர்களோ, அவர் மீண்டும் நடிக்க வருவார் என கூறி, நம்பிக் கொண்டிருந்தனர். அதுதான் நடந்திருக்கிறது.


கொஞ்சம் கூட நிர்வாகத் திறமை இல்லாதவர் பவன் கல்யாண். அவர், அரசியலுக்கு சுத்தமாக லாயக்கு இல்லாதவர். அதனால்தான், அவரது கட்சியை ஆந்திர மக்கள் முழுமையாக தோற்கடித்துள்ளனர். அவர் ஒரு மோசடிக்காரர் என்பது, ஆந்திர மக்களுக்கும் தெரிந்து விட்டது. அவர் படிப்பறிவில்லாதவர். அவர், பத்தாம் வகுப்புகூட தேறவில்லை. அவர் தான் படித்ததாக வைத்திருக்கும் கல்வி சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களும் போலியானவை.


இவ்வாறு ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள், கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவுஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு சமந்தா வழியில் சாயிஷா சமந்தா வழியில் சாயிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in