Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் கான் போல தமிழ் நடிகர்கள் செய்வார்களா ?

26 மே, 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
did-tamil-actors-follow-salman-khan

தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே படங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முன்னேற்ற நிகழ்வுகளுக்கு அந்தந்த படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

பெரிய நடிகர்கள் என்றால் முக்கிய விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு அத்துடன் ஒதுங்கி விடுவார்கள். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் உள்ள நடிகர்கள் மட்டும் மற்ற நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்கள். அவர்களில் கூட பலர் தனித் தனியாக பேட்டி கொடுப்பது போன்றவற்றையெல்லாம் செய்வதில்லை.


நடிகைகளின் ஒத்துழைப்பு அதைவிட மோசம். சில முன்னணி நடிகைகள் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றிற்குக் கூட வருவதில்லை. ஆனால், ஹிந்தியில் அப்படியல்ல. முன்னணியில் அதிலும் உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள் கூட எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் பேட்டிகள் கொடுப்பது, பல்வேறு விதமான பட சம்பந்தப்பட்ட முன்னேற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது என தொடர்ந்து செய்வார்கள்.


நம்பர் 1 ஹீரோவான சல்மான் கான் அடுத்து ஜுன் 5ம் தேதி வெளிவர உள்ள அவரது 'பாரத்' படத்திற்காக இப்போதே முன்னேற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இது பற்றி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கூட , “பேட்டி, பேட்டிகள், மேலும் பேட்டிகள்,” அதை மகிழ்வுடன் பதிவிட்டிருக்கிறார்.


இப்படி நமது தமிழ் ஹீரோக்களும் பேட்டி கொடுத்தால் அவர்களது படங்கள் மேலும் சில நாள் ஓடி, சில கோடி வசூலை கூடுதலாகக் கொடுக்குமே, செய்வார்களா ?.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ... ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

srinivasan - chaennal,இந்தியா
27 மே, 2019 - 06:15 Report Abuse
srinivasan First film should be good then only it will bring money. Nowadays best heroes films are becoming flop because no good story or not filmed best.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in