Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்

24 மே, 2019 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Anuragh-question-to-PM

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தனது பணியை தொடர்கிறார் நரேந்திர மோடி. இதை அவரது தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு நபர், பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்து சோசியல் மீடியாவில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அனுராக் காஷ்யப், “எனது மகளுக்கு பாலியல் மிரட்டல் செய்தி வெளியிட்டு உங்களது வெற்றியை கொண்டாடும், இது போன்ற உங்களது ஆதரவாளர்களை எப்படி டீல் செய்வது என்பதை எங்களுக்கு சொல்ல முடியுமா” என மோடியிடம் கேட்டுள்ளார்

இதற்கு பிஜேபியை சேர்ந்த அசோக் பண்டிட் என்பவர் அளித்துள்ள பதிலில், “இது மோடிக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக யாரோ ஒருவரால் போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்படும் செய்தி” என்று பதில் அளித்திருந்தார்

இதனால் கோபமான அனுராக் காஷ்யப், “மிஸ்டர் அசோக் பண்டிட்.. நீங்கள் எப்போதும் டுவிட்டரிலேயே சுற்றி கொண்டிருக்காமல் கொஞ்சம் இன்ஸ்டாகிராம் பக்கமும் கவனியுங்கள். இது என் மகளுக்கு நிஜமாகவே வந்த மிரட்டல்” என கூறியுள்ளார்.

இதன் பிறகு சீரியஸான பண்டிட், “என் மகளுக்கு இதுபோன்ற ஒரு மிரட்டல் வந்தால் இதற்காக பிரதமரிடம் முறையிட்டுக் கொண்டு இருக்காமல், நான் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பேன்” என கூறியுள்ளார். இவரது கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள் பலரும் அதேநேரம் அனுராக் காஷ்யப்பை போலீஸ் உதவியை நாடுமாறும் அறிவுறுத்தி வருகிறார்கள்

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்விபார்லி., தேர்தல் : பாலிவுட் ... பிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..? பிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26 மே, 2019 - 05:12 Report Abuse
J.V. Iyer இவர்களுக்கு எதை எங்கே எப்போது புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. தமிழ் மக்கள் போல உள்ளார்கள். தண்ணீர் இல்லையா மோடிஜி மீது குற்றம். கரண்ட் இல்லையா..மோடிஜி மீது குற்றம். பஸ் வரவில்லையா மோடிஜிமீது குற்றம். தூக்கம் வரவில்லையா மோடிஜிமீது குற்றம். மோடிஜி என்ன கடவுளா? அவருக்கு வேறு வேலையில்லை? வோட்டு போட்ட மாநிலங்கள் தான் முக்கியம். நம்பி வோட்டு போட்டிருக்கிறார்கள்.
Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
25 மே, 2019 - 21:15 Report Abuse
Krishnamoorthi A N "என் மக்களுக்கு இது போன்ற ஒரு மிரட்டல் வந்தால் இதற்காக பிரதமரிடம் முறையிட்டுக் கொண்டு இருக்காமல் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளிப்பேன்" அசோக் பண்டிட் கொடுத்துள்ள பதிலடி மிக மிகச் சரியானதே. மிரட்டல் கடிதம் வந்தவுடன் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தால் சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுத்தவனை உடனே வளைத்துப் பிடித்திருக்கலாம். அதைவிட்டு காலம் தாழ்த்திக்கொண்டிருந்தால்? தும்பை விட்டு வாலைப்பிடிப்பதில் என்ன பயன்?
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
25 மே, 2019 - 09:52 Report Abuse
குறையொன்றுமில்லை எதை எங்க யார் கிட்ட சொல்லணும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா ? நாட்டின் பிரதமரை இதுக்கு எல்லாம் பதில் சொல்லணும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in