விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் அதையடுத்து உருவாகி வரும் இன்னொரு பிரமாண்ட படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில இப்படம் தயாராகி வருகிறது.
சாஹோ படம் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், இத்தகவலை இயக்குநர் சுஜீத்தே கூறியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இதை சுஜீத் மறுத்துள்ளார். சாஹோ படத்தில் சல்மான் நடிக்கவில்லை. அப்படி வெளியான செய்தி உண்மையில்லை. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார் சுஜீத்.