தியேட்டர்களில் வெளியான 6 படங்கள் தொடர் தோல்வி ; தடுமாறும் மோகன்லால் | குடிபோதையால் நல்ல வாய்ப்பை தவறவிட்ட கோமாளி! ஓட்டேரி சிவாவை திட்டித்தீர்க்கும் ஜனங்கள் | நானும் சாதாரண மனுஷி தான்! ரசிகருக்கு யாஷிகா அட்வைஸ் | விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த சமந்தா | மைக்கேல் டிரைலரை பாராட்டிய விஜய் ; மகிழ்ச்சியில் சந்தீப் கிஷன் | விஜய் ஸ்டைலிலேயே குத்தாட்டம் போட்ட சாண்டி, சில்வியா! வைரலாகும் டான்ஸ் வீடியோ | இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி |
கடந்த சில வருடங்களாகவே ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக மாறி வருகிறது. அந்த வகையில் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் படமாக இருக்கிறது. சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இந்த படத்தை அனு மேனன் இயக்குகிறார்.
மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் சகுந்தலா தேவி, மிக சிக்கலான கணக்குகளை கூட எளிதாக தீர்க்கக் கூடிய அறிவாற்றல் பெற்றவர். 1982 லேயே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். கணிதம் பற்றி நிறைய சூத்திரங்கள் கணக்குகள் குறித்த பல புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.