Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்

28 ஏப், 2019 - 11:59 IST
எழுத்தின் அளவு:
sunny-leone-breaks-down

இந்தி பட உலகில் செக்ஸி நடிகையாக அறியப்பட்டிருக்கும் சன்னி லியோன், இப்பவும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடித்துச் செல்லும் நடிகையாகவும் இருக்கும் அவர், தற்போது டி.வி., சீரியல்களில் அதிகம் தலை காட்டுகிறார். டி.வி., நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் வருகிறார்.

அவர் ஒரு டி.வி., நிகழ்ச்சியின் போது, கண்ணீர் விட்டு அழுது விட்டார். அவருடைய குழுவில் பிரபாகர் என்பவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீர் என கிட்னி பழுதானது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக போனார். ஆனால், அவரது கிட்னியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.


கிட்னி முழுமையான செயல்பாடுகளை இழந்ததோடு, மற்ற உடல் உறுப்புகளையும் பாதிப்படைய வைத்தது. இந்த நிலையில், அவரின் மருத்துவ உதவிக்காக, அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சமூக வலைதளம் மூலம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு, எதிர்மறையான விமர்சனங்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தன.


நடிகைகள் தங்கள் கார் ஆடம்பரத்துக்கு செய்யும் செலவை, பிரபாகரின் மருத்துவத்துக்காக கொடுத்து உதவலாமே என, பலரும் கேட்டனர்.


இதனால் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருந்த சன்னி லியோனுக்கு அடுத்த அடியாக, பிரபாகரின் மரண செய்தி வந்து தாக்கியது. இந்த சங்கடத்தில் இருந்தவரை நோக்கி, ஒரு டி.வி., நிகழ்ச்சியில், பிரபாகர் மரணம் குறித்து கேட்டுவிட, சன்னி லியோன் கண் கலங்கி அழுதே விட்டார்.


என்னுடைய குழுவில் இருந்து பணியாற்றியவர்களில் பிரபாகர் மிக முக்கியமானவர். அவருடைய உடல் நிலை மோசமான போது கூட, தன்னுடைய மருத்துவ உதவிக்காக அவர் யாரிடமும் செல்லக் கூடாது என்றுதான் நினைத்தார். ஆனால், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள், அவருக்காக பொருள் உதவி கேட்டோம். ஆனால், பலரும் அதை மோசமான விமர்சித்து விட்டனர். இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. ஒரு நல்ல உள்ளம், இப்போது நம்மை விட்டு பிரிந்திருக்கிறது. அதுதான் தாங்க முடியாத சோகமாக இருக்கிறது என்று சொல்லி கண்ணீர் விட்டார் சன்னி லியோன்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்குரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் ... கிளாமரில் தெறிக்கவிடும் திஷா பதானி கிளாமரில் தெறிக்கவிடும் திஷா பதானி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28 ஏப், 2019 - 14:11 Report Abuse
M Selvaraaj Prabu அவர் யாரிடமும் செல்ல கூடாது என்று நினைத்தது தவறு இல்லை. ஆனால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் நீங்கள் அவர் கேட்காமலேயே கொடுத்து இருக்கலாமே. "எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்து பொருள் உதவி கேட்டாராம்". என்ன ஜென்மங்கள், "இதை" போன்ற நடிகையிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in