Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியா வாரியருக்கு மீண்டும் பாலிவுட் பட வாய்ப்பு

26 ஏப், 2019 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Priya-Warrier-got-another-bollywood-offer

மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியர், அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து புருவ அழகி என புகழ் பெற்றவர். அதேசமயம் அந்த படம் வெளியான பின்பு அவரது நடிப்பு மிக மோசமாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிரியா வாரியர் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் இந்தியில் இன்னொரு படம் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படத்திற்கு லவ் ஹேக்கர்ஸ் என டைட்டில் வைத்துள்ளார்கள்., பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் இயக்கும் இந்தப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் துவங்கி டெல்லி, குர்கான், மும்பை மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் சிக்கிக்கொண்ட ஒரு பெண் தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதையும் தனது கதாபாத்திரமும் என கூறியுள்ளார் பிரியா வாரியார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பி.டி.உஷாவாக நடிக்கும் கத்ரினா கைப்பி.டி.உஷாவாக நடிக்கும் கத்ரினா கைப் ரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு ரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in