Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மனைவிக்கு ஷூலேஸ் கட்டிவிட்ட கணவர்

22 ஏப், 2019 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Anand-Ahuja-gets-down-on-his-knees-to-tie-Sonam-Kapoors-shoelace

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஞ்சனா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர், கடந்த ஆண்டு ஆனந்த் அகுஜா என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டார்.

கணவனும், மனைவியும் கருத்தொருமிக்க தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளும் படங்களை அடிக்கடி இன்ஸ்ட்ராகிராமில் வெளியிடுவார்கள். அப்படி வெளியிட்ட ஒரு படம் தற்போது பாராட்டும், சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

சமீபத்தில் டில்லியில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு கணவனும், மனைவியும் சென்றார்கள். அப்போது சோனம் கபூர் அணிந்திருந்த ஷூவின் லேஸ் அவிழ்ந்து அவர் தடுமாறி விழ இருந்தார். இதனை கவனித்த ஆனந்த் அகுஜா பொது இடம் என்றும் பாராமல் அவரது ஷூலேசை கட்டிவிட்டார். இந்தப் படத்தை சோனம் கபூர் தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டார்.

ஒரு பக்கம் ஆனந்த் அகுஜாவின் அன்பை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். இன்னொரு பக்கம் கணவனை பொது இடத்தில் இப்படி நடத்தலாமா, சோனம் கபூர் அதை தடுத்திருக்க வேண்டாமா? என்று கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். தற்போது இது பெரிய விவாதமாக சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; லீக்கான வீடியோபள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; ... ராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட் ராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26 ஏப், 2019 - 08:20 Report Abuse
Natarajan Ramanathan பொது இடங்களில் ஈஷிக் கொள்ளும் அநேக இளம் தம்பதியினர் இறுதிவரை இணைந்து வாழ்வது ரொம்பவே அபூர்வம்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25 ஏப், 2019 - 11:24 Report Abuse
A.George Alphonse Let us discuss this topic in Patti Mandram under the Chief Judges of Professor Solomon Pappaiah, Sri.Dindugal Lyoni and actor Mr.Ramash Kanna and come to the conclusion about the Merit and the De-merit of tying of shoe laces to wives by husbands in public places.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23 ஏப், 2019 - 16:43 Report Abuse
Endrum Indian தாங்கள் மனமொத்த தம்பதிகள் என்று யார் இல்லையோ அவர்கள் தான் இந்த வெளிவேஷத்தை காட்டிக்கொள்ள மிகவும் பிரயத்தனம் செய்வார்கள், சாதாரண தம்பதியர் தாம் உண்டு தம் செயல் உண்டு என்று எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பர். இதெல்லாம் ஒரு அட்வெர்ட்டிஸ்ட்மென்ட், வெறும் வியாபாரம் அவ்வளவு தான்
Rate this:
maryjohnson - Chennai,இந்தியா
23 ஏப், 2019 - 14:41 Report Abuse
maryjohnson ஆணுக்கு பெண் சமம் என்று பேசுவதோடு நிறுத்தாமல் செயலை செய்த அன்பரை பாராட்ட வேண்டிய பக்குவம் தேவைப்படுகிறது. இதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது. நம்முடைய பார்வை மனதும் விரிவடைய வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in