ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! |
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். கோடியில் ஒருவருக்கு வரும் அபூர்வ மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இந்தியாவில் அதற்கான சிகிச்சை இல்லை என்பதால் லண்டன் சென்ற அவர் கடந்த 6 மாதமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமாகி திரும்பி இருக்கிறார். அதோடு மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார்.
அபூர்வ மூளை புற்று நோயிலிருந்து அவர் மீண்டிருப்பது, பாலிவுட்டிலும், மருத்துவத் துறையிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தற்போது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
"இர்பானின் மிகச் சிறந்த ஒத்துழைப்பே அவர் குணமடைந்ததற்கு காரணம்" என்று சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
"இறைவன் என்னை குணமாக்கிக் கொடுத்தான். அவன் சொன்னபடியும், டாக்டர்கள் சொன்னபடியும் கேட்டு நடந்ததால் குணமடைந்தேன்" என்கிறார் இர்பான்.