‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
சல்மான்கானின் மிகப்பெரும் வெற்றிப் படங்களில் ஒன்று 'தபாங்'. இந்தப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்து பெரும் வசூலைக் குவித்தது. அந்தப்படம் தெலுங்கில் 'கப்பார்சிங்' என்ற பெயரில் ரீமேக் ஆகி பவன் கல்யாண் நடிக்க சூப்பர் ஹிட்டாக ஓடியது. தமிழில் சிம்பு நடிக்க 'ஒஸ்தி' என்ற பெயரில் படுதோல்வி அடைந்தது.
'தபாங்' படத்தின் இரண்டாம் பாகம் 2012ல் வெளிவந்தது. மூன்றாம் பாகத்தை உருவாக்க கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வந்தார்கள். சில பல தாமதத்திற்குப்பின் இன்று(ஏப்.,1) இந்தூரில் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. பிரபுதேவா நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஹிந்தியில் இயக்கும் படம் இது.
சல்மான் கான், சோனாக்ஷி சின்கா, அர்பாஸ்கான் இதற்கு முந்தைய பாகங்களில் நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தப் படத்திலும் நடிக்கிறார்கள். சஜித் - வஜித் படத்திற்கு இசையமைக்கிறார்கள். படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.