Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்

18 மார், 2019 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Salman-khan-to-launch-his-own-TV

ஹிந்தித் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவர் சினிமாவில் நடிப்பதோடு படங்களையும் தயாரித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சல்மான்கான் என்ற பெயருக்கு இந்தியாவில் தனி வணிகம் உண்டு. அந்த வணிகத்தை தனக்குச் சொந்தமாகவே முழுமையாக மாற்றும் முயற்சியில் சல்மான் இறங்கியிருக்கிறார்.

எஸ்கே டிவி என்ற பெயரில் அவர் டிவி ஒன்றை ஆரம்பிக்க விண்ணப்பம் செய்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை சல்மான் வாங்கி வந்திருக்கிறார். அதனால், இந்த திட்டத்தை அவர் முன்னரே யோசித்து வைத்துவிட்டார் என்கிறார்கள்.

சல்மான்கான் என்பதன் சுருக்கம்தான் எஸ்கே. தன் பெயரில் டிவி ஆரம்பித்த பிறகு அவர் மற்ற டிவிக்களில் தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டு தன் டிவியில் மட்டுமே நிகழ்ச்சிகளைச் செய்வார் என்றும் சொல்கிறார்கள்.

டிவியிலிருந்து வந்த ஷாரூக்கான் கூட இப்படி டிவி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், சல்மான் கான் டிவி ஆரம்பிக்கப் போகிறார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் டிவி ஆரம்பிக்கலாம் என்றும் தெரிகிறது. ஏற்கெனவே, ஹிந்தியில் எண்ணற்ற சேனல்கள் இருக்கின்றன. அவற்றுடன் சல்மானும் போட்டிக்குள் நுழைகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்பிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ் அவமானப்படுத்தப்பட்டாரா ஷாருக்கான் ? அவமானப்படுத்தப்பட்டாரா ஷாருக்கான் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in