Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி புகார்

25 பிப், 2019 - 15:29 IST
எழுத்தின் அளவு:
Cheating-case-file-against-actress-Sonakshi-Sinha

ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. ஹிந்தியில் பிசியாக நடித்து வரும் இவர், ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.

இவர் மீது, உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி டில்லியில் இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சோனாக்ஷி சின்ஹாவிற்கு ரூ. 37 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்ததால் நிகழ்ச்சி தடைபட்டது. அதோடு, கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி தர மறுத்து வருகிறார் என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் பிரமோத் சர்மா என்பவர் அந்த புகாரில் கூறியுள்ளார். அதையடுத்து சோனாக்ஷி சின்ஹா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
48 வயதில் பள்ளி காதலரை 2வது திருமணம் செய்யும் பூஜா பேடி48 வயதில் பள்ளி காதலரை 2வது திருமணம் ... திலீப் பட ரீமேக்கில் நடிக்கும் ஷாருக்கான் திலீப் பட ரீமேக்கில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in