Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கிண்டலடிக்கப்பட்ட கங்கனாவின் குதிரையேற்றம்

24 பிப், 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranaut-viciously-trolled-for-riding-mechanical-horse-in-Manikarnika

ஹிந்தித் திரையுலகத்தில் சர்ச்சை நடிகை எனப் பெயரெடுத்தவர் கங்கனா ரனவத். அவரது கூட்டு இயக்கத்தில் வெளிவந்த 'மணிகர்ணிகா' படம் நல்ல விமர்சனத்தையும், 100 கோடி வசூலையும் பெற்றது. தன் படத்திற்கு வேறு எந்த ஒரு ஹிந்தி நட்சத்திரங்களும் ஆதரவாகப் பேசி பிரமோஷன் செய்யவில்லை என்று கங்கனா குற்றம் சாட்டியிருந்தார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் படத்தை எடுத்ததற்குக் கூட பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தரவில்லை என்று கண்டித்திருந்தார்.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் 'மணிகர்ணிகா' படத்தில் கங்கனா குதிரை மீது அமர்ந்து சண்டை செய்யும் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. அதில் மோட்டார் மூலம் ஓடும் குதிரை பொம்மை மீது கங்கனா அமர்ந்து நடித்ததைப் பார்த்து பலரும் கிண்டலடித்தார்கள். இந்தப் படத்திற்காக கங்கனா நிஜமாகவே குதிரையேற்றப் பயிற்சி பெற்று சண்டையிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அது உண்மையில்லை, என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வந்ததும் 'டிரோல்' செய்வது அதிகமானது.


அதற்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி கிண்டலடித்தவர்களை 'முட்டாள்தனமானவர்கள் டெக்னாலஜியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். முட்டாள்கள். குளோசப் காட்சிகளை இப்படித்தான் படமாக்குவார்கள். இது மெக்கானிக்கல் குதிரை. 'கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், பிரேவ் ஹார்ட்' போன்ற படங்கள் இப்படித்தான் எடுக்கப்பட்டன. முட்டாள்கள்” என விமர்சித்திருக்கிறார்.


ரங்கோலியின் இந்த விமர்சனத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'மணிகர்னிகா' வெற்றி; கங்கனா மகிழ்ச்சி'மணிகர்னிகா' வெற்றி; கங்கனா ... அம்மா நினைவு; ஸ்ரீதேவி மகள் பதிவு அம்மா நினைவு; ஸ்ரீதேவி மகள் பதிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24 பிப், 2019 - 19:50 Report Abuse
Mirthika Sathiamoorthi வந்த செய்திக்கும் உங்க கருத்துக்கும்...எனக்கு புரியல...ஏன் ரசிகர்கள் மேல் இப்படி கோவம்?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24 பிப், 2019 - 15:34 Report Abuse
Endrum Indian சினிமா என்பது மாயை என்பதை எப்பொழுதாவது இந்த So Called ரசிகர்கள் உணர்ந்தால் அன்று தான் இந்த நாட்டுக்கு விடிவு கிடைக்கும். ஆகவே தான் நடிகன்/நடிகை உண்மை ரகசியம் தெரியாமல் ஏதோ ஆகாயத்தை வில்லாக வளைத்து விடுவார்கள் என்று அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்து, ரூ. 4.2 லட்சம் கடனில் தடத்தைக்கின்றது இந்த நாடு. இனியாவது சினிமா வெறும் மாயை வீதியில் செல்லும் வேலையற்ற ஒருவனை கூட அதே போல நடிக்க வைக்க முடியும் என்று உணருங்கள் ரசிகர்களே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in