ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீதத்தா. தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். இந்திய சினிமாவில் மீ டூ புகாரை முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர் தான். நடிகர் நானா படேகர் மீது மீ டூ புகார் கூறி அவரது சினிமா கேரியருக்கே பின்னடவை ஏற்படுத்தினார். நானா படேகர் இவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதை சட்டரீதியாக சந்தித்து வருகிறார் தனுஸ்ரீதத்தா.
இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஒரு பிரிவான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் உரையாற்றுகிறார். இதற்காக பல்கலைகழக மாணவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்காக நாளை அமெரிக்கா செல்லும் தனுஸ்ரீதத்தா, வருகிற 16ந் தேதி பல்கலைகழகத்தில் உரையாற்றுகிறார். இதே பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.