Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டின்னர் வார்த்தையே அருவெறுப்பு: ஷெர்லின்

11 பிப், 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Sherlyn-Chopra-angry-about-Dinner-word

கவர்ச்சிப் படங்களில் தாராளமாக நடிப்பவர் இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா. இந்தி, தெலுங்கு மற்றும் பல ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கும் ஷெர்லின், காமசூத்ரா 3டி படத்திலும் நடித்துள்ளார். அவர், பாலிவுட்டில் இருக்கும் ஆண் பிரமுகர்கள் குறித்து ஆத்திரமாக கூறியிருப்பதாவது:

நடிப்பதும், மாடலிங் செய்வதும் என்னுடைய தொழில். அந்தத் தொழில் நிமித்தமாக எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து கொள்கிறேன். நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பது கூட தொழில் நிமித்தமாகத்தான். அதற்காக, நான் எல்லா தவறுகளுக்கும் ஆட்படுவேன் என ஆண் சமூகம் தன்னிச்சையாக நினைத்துக் கொண்டால், அதுதான் முக்கியத் தவறு. திரையுலகில், குறிப்பாக, பாலிவுட்டில் ஏராளமான ஆண் மிருகங்கள் இருக்கின்றன.

சினிமா வாய்ப்புத் தேடி வரும் இளம் பெண்களை, அந்த ஆண் மிருகங்கள், டின்னருக்கு வருகிறாயா? வேலை விஷயமாக உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி அழைக்கின்றன. ஆனால், உண்மையில் அதன் அர்த்தமே வேறு. அதாவது, இப்படி ஒருவர் டின்னருக்கு அழைத்தால், அழைக்கப்படும் பெண், அன்றைய தினத்து இரவை, அந்த ஆண் மிருகத்துடன் கழிக்க வேண்டும் என்பது அர்த்தம்.

சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல ஆண் மிருகங்கள், என்னை அப்படி இரவுக்கு அழைத்திருக்கின்றன. துவக்கத்தில், அவர்கள் நோக்கம் என்ன என்று எனக்குப் புரியவில்லை. போக போகத்தான் புரிந்து கொண்டேன். அதனால், டின்னர் என்ற வார்த்தையை இப்போது எங்கு கேட்டாலும் எனக்கு அருவெறுப்புத்தான் வருகிறது. நாராசமாக இருக்கிறது. இனி, சாதாரணமாக யாரும் என்னிடம் டின்னருக்கு வா என்று அழைத்து விடக் கூடாது. அப்படியொரு வெறுப்பின் உச்சத்தில் நான் இருக்கிறேன்.

இவ்வாறு ஷெர்லின் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
என்னை கும்பல் சேர்ந்து எதிர்த்தார்கள் - கங்கனா குற்றச்சாட்டுஎன்னை கும்பல் சேர்ந்து ... ஹார்வர்டு பல்கலைகழகத்தில் உரையாற்றும் தனுஸ்ரீ தத்தா ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

INNER VOICE - MUMBAI,இந்தியா
12 பிப், 2019 - 08:57 Report Abuse
INNER VOICE யம்மா, குடும்ப பெண்கள் நமது கலாச்சார உடை அணிந்து வருபவர்களிடம், யாரும் டின்னருக்கு வரையா என்று கேட்க மாட்டார்கள். அரை குறை ஆடை அணிந்து ஆண்களை மயக்குவதற்காக செக்ஸியா, பேஷன் மாடல் என்று கவர்ச்சியா வருபவர்களிடம் அவர்கள் கேட்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் உங்கள் அணியும் உடையோ, அல்லது நிர்வாணமாக போஸ் கொடுப்பதுதான் காரணம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
12 பிப், 2019 - 08:48 Report Abuse
Indhiyan நாட்டில் மிருகத்தனமான ஆண்கள் உள்ளார்கள் என்பது உண்மைதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in