Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என்னை கும்பல் சேர்ந்து எதிர்த்தார்கள் - கங்கனா குற்றச்சாட்டு

10 பிப், 2019 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranaut:-Bollywood-has-Called-for-Trouble-By-Ganging-Up-Against-Me

ஹிந்தித் திரையுலகத்தில் சர்ச்சை நாயகி என்றழைக்கப்படுபவர் கங்கனா ரணவத். அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மணிகர்ணிகா' நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் விளாசியிருக்கிறார்.


“ஆரம்பத்தில், பாலிவுட்டில் உள்ள செக்சிசம், முரண்பாடு, உறவினர்கள், நண்பர்களுக்குத் தரும் முன்னுரிமை ஆகியவற்றை எதிர்த்துள்ளேன். ஆனால், இப்போது அனைவரைப் பற்றியும் வெளிப்படுத்துவேன். என்னை எதிர்க்க அனைவரும் கும்பல் சேர்ந்தார்கள்.


மற்றவர்கள் என் படத்தைப் பற்றிப் பேசி பிரமோஷன் செய்வது எனது படத்திற்கு எந்த உதவியும் தந்திருக்காது. நான் மூன்று தேசிய விருதுகளை வாங்கியதோடு 31 வயதில் இயக்குனராகவும் ஆகிவிட்டேன். அதனால், அவர்கள் ஏன் எனக்காக பிரமோஷன் செய்ய வேண்டும். அவர்களை அவர்களே பிரமோட் செய்து வெற்றி பெற்றிருந்தால் அது அவர்களுக்குப் பெரிய விஷயம்.


நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன் ?. ராணி லட்சுமி பாய் என்னுடைய அத்தையா ?. அவர் இந்த நாட்டின் அடையாளப் பெண்மணி. அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நான் பேசியதுதான் இதற்குக் காரணம். அவர்களைப் பற்றி நான் விமர்சித்து பேசியதற்காக, எனக்கெதிராக அவர்கள் கும்பல் சேர்ந்திருக்கிறார்கள்.


அவர்கள் வெட்கமில்லாதவர்கள். அவர்களில் சிலர் என் தாத்தா போன்றவர்கள். அவர்களுடன் பணியாற்றி நான் விரும்பியதில்லை. அதை நான் அவர்கள் முகத்திற்கெதிராகவே சொல்வேன். ராணி லட்சுமிபாய் பற்றி நாங்கள் எடுத்த இந்தப் படம் எதிர்கால சந்ததியினருக்கானது. இந்த நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்தவர் அவர்,” எனக் கூறியுள்ளார் கங்கனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ஹரியானா திருடன்?அக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ... டின்னர் வார்த்தையே அருவெறுப்பு: ஷெர்லின் டின்னர் வார்த்தையே அருவெறுப்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in