பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா! | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா! | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது |
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், லண்டன் நகர் உட்பட, உலகம் முழுவதும் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகங்களில், வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு, அவர்களை நேரில் பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்ட, மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகத்தில், பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பிரபலமான, பிரியங்கா சோப்ராவின் மெழுகுச் சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த, 2016ல் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, பிரியங்கா அணிந்திருந்த சிவப்பு நிற உடையும், பிரியங்காவுக்கு, அவரது கணவர் நிக் ஜோனஸ் அணிவித்த வைர மோதிரம் போன்ற மோதிரமும், மெழுகுச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை, சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்ட பிரியங்கா, விரைவில், லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில், என் மெழுகுச் சிலைகளை காணலாம் என, கூறியுள்ளார்.பிரியங்கா சோப்ரா, 36, தமிழில், விஜய் ஜோடியாக, தமிழன் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.