Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வலிகளை மறக்க சினிமாவில் நடிக்கிறேன்: சோனாலி

06 பிப், 2019 - 15:56 IST
எழுத்தின் அளவு:
Sonali-bendre-again-acting-in-Cinema

தமிழில் 'காதலர் தினம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சோனாலி பிந்த்ரே, 'பம்பாய்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.

அவரது வாழ்க்கையில் திடீர் சோகமாக, புற்று நோய் தாக்கியது. இந்த பாதிப்பை சரி செய்வதற்காக, அவர் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். தலைமுடியை அகற்றி, மொட்டைத் தலையுடன் காட்சி அளித்த சோனிலி பிந்த்ரேயின் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அவரது ரசிகர்கள் கதறினர்.

இந்நிலையில், தனக்கான நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை பற்றி சோனாலி பிந்த்ரே கூறியிருப்பதாவது : புற்று நோய் என்பது ஒரு கொடூரமான நோய். இந்த நோய் தாக்குதலுக்குப் பின், உடலில் பெரிய அளவில் அசைவுகளைக் கூட மேற்கொள்ள முடியவில்லை. விரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பிலும்கூட, வலியை உணர்ந்தேன். 'கீமோதெரபி'க்கு பின், அறுவை சிகிச்சை நடந்தது. அந்த நாட்கள் மிகவும் துயரமானது. உடலில் தொடங்கிய வலி, மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது. அந்தத் துன்பத்தை அவ்வளவு எளிதாக வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது என தன் வேதனையை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன், ஓரளவு குணமடைந்து நாடு திரும்பினார் சோனாலி. இதுகுறித்து, அவரது கணவர் கோல்டி பெல் கூறும்போது, “சோனாலி பிந்த்ரேவுக்கு, புற்றுநோய் சிகிச்சை முடிந்துள்ளது. நோய் திரும்பவும் வர வாய்ப்பு உள்ளதால், அடிக்கடி சோதனைக்காக, அமெரிக்கா செல்ல வேண்டும்” என்றார்.

சில வாரங்கள் வீட்டில் ஓய்வு எடுத்த சோனாலி பிந்த்ரே, மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது விளம்பர படமொன்றில் நடிக்கிறார். விரைவில், ஹிந்தி படத்திலும் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நீண்ட ஓய்வுக்கு பின், படப்பிடிப்பு அரங்குக்கு திரும்பி இருக்கிறேன். மீண்டும் கேமரா முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதாக பிறந்த உணர்வுடன், நடிக்க வந்திருக்கிறேன். நோயுடன் நான் போராடி போராடி பெற்ற வலிகளையெல்லாம், மெல்ல மெல்ல மறக்கத் துவங்கி இருக்கிறேன். விரைவில், நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விடுவேன். சினிமாவில் நடிக்கும்போது, என்னுடைய தன்னம்பிக்கையும் கூடுகிறது” என்றார் சோனாலி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சன்னி லியோனை தடுமாற வைத்த ராஜூசுந்தரம்சன்னி லியோனை தடுமாற வைத்த ... காங்கிரசில் ஏன் சேர்ந்தேன்? : ஷில்பா விளக்கம் காங்கிரசில் ஏன் சேர்ந்தேன்? : ஷில்பா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in