Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எல்லா முடிவுகளும் நான் எடுத்தவை : கங்கனா

02 பிப், 2019 - 15:43 IST
எழுத்தின் அளவு:
I-make-all-decision-says-Kangana

'மணிகர்ணிகா' படத்தை முழுவதுமாக இயக்கி முடிப்பதற்குள் அந்தப் படத்திலிருந்து விலகினார் இயக்குனர் கிரிஷ். 'என்டிஆர்' படத்தை இயக்க வெளியேறியதாகவே அப்போது சொல்லப்பட்டது.

தற்போது படம் வெளிவந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படத்தை முதலில் இயக்கிய கிரிஷ், படத்தின் பல காட்சிகளை தான் இயக்கியதாகவும், அதற்கான பெயரை தற்போது கங்கனா ரணவத் வாங்கிக் கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி பதிலடி கொடுத்து வந்தார். இது தொடர்பாக கடந்த ஒரு வார காலமாகவே கடும் சர்ச்சை நிலவி வந்தது. அந்த சர்ச்சை குறித்து தற்போது கங்கனா கருத்து தெரிவித்துள்ளார்.

“படத்தில் கிரிஷ் பார்த்த வேலைக்கு கிரெடிட் கொடுத்தாகிவிட்டது. ஆனால், அவர் இப்படி பேசுவது சரியில்லை. படத்தைப் பற்றி அவருக்கு பிரச்சினை இருந்தால் தயாரிப்பாளர்களிடம் பேச வேண்டும். அதற்காக என்னைத் தாக்கிப் பேசக்கூடாது.

அவர் சொல்வதை நிரூபிக்க வேண்டும். மீடியா முன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. அதிர்ஷ்டவசமோ, துரதிர்ஷ்டவசமோ படத்தை நான் இயக்கினேன். படத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவை. படம் வெளியாகிவிட்டது. இதற்கு மேல் எதுவும் நடக்கப் போவதில்லை.

கிரிஷ்ஷுக்கு ஒரு ஆலோசனை சொல்வேன். இந்த மொத்தக் குழுவுடன் அவர் ஒரு படம் இயக்கட்டும். அதில் சோனுவை வில்லனாகவும், மிஷ்டியை கதாநாயகியாகவும், அபூர்வாவை கதை எழுதவும் வைக்கட்டும். அப்படி ஒரு படத்தை அவர் இயக்கட்டும். அதிலிருந்து நானும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வேன்.

என்னுடைய சொந்த முயற்சியால் நான் திரைப்பட படைப்பாளி ஆகியிருக்கிறேன். 'மணிகர்ணிகா'வை விடவும் சிறந்த ஒரு படத்தை அடுத்து இயக்குவேன்,” காட்டமாக பதிலளித்துள்ளார்.

சோனு சூட், அபூர்வா, மிஷ்டி சக்கரவர்த்தி ஆகியோரும் கங்கனா மீது குற்றம் சாட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'மணிகர்ணிகா' விவகாரம் இத்துடன் நிற்குமா அல்லது தொடருமா என்பது கிரிஷ் கையில்தான் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூஜையுடன் தொடங்கியது சன்னி லியோனின் ரங்கீலாபூஜையுடன் தொடங்கியது சன்னி லியோனின் ... பேட்மேன் படத்தில் நிக் ஜோனாஸ் பேட்மேன் படத்தில் நிக் ஜோனாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in