சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
ஹிந்தித் திரையுலகில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நட்சத்திரங்களில் சிலர் இருப்பார்கள். நடிகைகளில் கங்கனா ரணவத்திற்கும் அதில் ஒரு இடமுண்டு. அவரது நடிப்பில் வெளிவந்து தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 'மணிகர்ணிகா - த குயின் ஆப் ஜான்சி' படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தை 75 சதவீதம் வரை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிரிஷ், திடீரென அந்தப் படத்திலிருந்து விலகினார். அதன்பின் படத்தை கங்கனாவே இயக்கினார்.
படம் வெளிவந்த பின்தான் அப்படத்தின் இயக்கத்திலிருந்து தான் ஏன் வெளிவந்தேன் என்பது குறித்து விளக்கமளித்தார் இயக்குனர் கிரிஷ். தான் தங்கத்தை உருவாக்கி வைத்ததாகவும் அதை கங்கனா வெள்ளியாக மட்டுமே காட்டினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி மறுப்பும், கண்டனங்களும் தெரிவித்திருந்தார். பின்னர், ரங்கோலி, சில வாட்சப் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக கிரிஷ்ஷும் சில வாட்சப் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பதிவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. படத்தின் எடிட்டர் சுராஜ் தெரிவித்துள்ளதன்படி பார்த்தால் படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டு கங்கனா அவருடைய கதாபாத்திரத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் மற்றும் காட்சிகள் ஆகியவற்றை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்தான் முதலில் படத்திற்கு எடிட்டராக இருந்துள்ளார் என்பதும் தெரிகிறது.
கிரிஷ்ஷின் இந்த வாட்சப் பதிலடிக்கும் மிகவும் கடுமையான முறையில் ஏளனத்துடன் பதிலளித்திருக்கிறார் ரங்கோலி.
மணிகர்ணிகா படத்தை உருவாக்கியதை விட படம் வெளியானதற்குப் பின்பான சர்ச்சை அதிகமாகி வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களோ, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களோதான் முழு விளக்கமளிக்க வேண்டும்.