சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தெலுங்கு இயக்குனரான கிரிஷ், மணிகர்ணிகா படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படத்தை எடுத்து முடிவடையும் சமயத்தில் படத்தை விட்டு விலகினார். அவர் ஏன் விலகினார் என்பது குறித்து உண்மை வெளிவரவில்லை. படத்தின் டிரைலர் வெளிவந்த போது கங்கனா பெயரும் சேர்ந்து வந்தது. படத்தில் கங்கனா பெயர் முதலிலும், கிரிஷ் பெயர் இரண்டாவதாகவும் இடம் பெற்றது. படத்திலும் அவருடைய பெயரை ராதாகிருஷ்ணா ஜகர்லமுடி என்றே போட்டிருக்கிறார் கங்கனா.
படம் வெளியான பின் மணிகர்ணிகா என் குழந்தை என படத்தின் இயக்குனர் குற்றம் சாட்டி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :
“மணிகர்ணிகா படத்தின் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகளை நான் இயக்கினேன். வெளியீடு வரை அமைதியாக இருந்தேன். இனியும் நான் பேசாமல் இருந்தால் எங்களது கடின உழைப்பு கெடுதியில்தான் முடியும். என்னை விட்டுப் படம் போன பிறகு பலரும் என்னைப் பேசச் சொன்னார்கள். நான் இயக்கியது தங்கம், அதை கங்கனா வெள்ளியாக மாற்றிவிட்டார்.
படத்தை முடிக்காமல் நான் வெளியேறவில்லை. மணிகர்ணிகா படத்திற்காக 109 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். பின்னர் டப்பிங் மற்ற வேலைகளை முடித்தேன். அதன் பிறகே நான் வெளியேறினேன். என்னைப் பொறுத்தவரையில் படம் முடிவடைந்தது. கங்கனாவைத் தவிர மற்றவர்கள் டப்பிங் பேசி முடித்துவிட்டார்கள்.
நான் படத்தை முடித்ததும் சில பேட்ச் வேலைகளை என் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என கங்கனா விரும்பினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பல காட்சிகளை அவர் மீண்டும் எடுக்க வேண்டும் என்று சொன்னார். எனது ஒளிப்பதிவாளர் ஞானசேகர் சரியாக ஒளிப்பதிவு செய்யவில்லை என்று சொன்னார். அது எவ்வளவு அபத்தமானது. இந்தப் படத்திற்காக அனைவரும் முழுமூச்சுடன் வேலை பார்த்தார்கள்.
என்னை கிரிஷ் ஆகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால், படத்தில் எனது பெயரை டிரைலரில் என் பெயருக்குப் பிறகுதான் கங்கனா பெயர் வந்தது. ஆனால், படத்தில் அவர் பெயர் முதலில் வந்த பிறகுதான் என் பெயர் வருகிறது. அவரிடம் கேட்டதற்கு, அவர்தான் பல காட்சிகளை எடுத்ததாக் கூறினார். இந்தப் படம் என்னுடைய நான்காவது சரித்திரப் படம். இதற்கு முன்பு மூன்று சரித்திரக் கதைகளை இயக்கியதால்தான் இந்தப் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. விஜயேந்திர பிரசாத் என்னை அழைத்து படத்தை இயக்கச் சொன்னார். இந்தப் படம் இயக்குவதற்கு முன்பாக 20க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்தேன்.
நான் ஏன் படத்திலிருந்து விலகினேன் எனப் பலர் கேட்ட போது வருத்தப்பட்டேன். நான் படத்தை விட்டு விலகவில்லை. நான் 95 சதவீதக் காட்சிகளை முடித்துவிட்டேன். கங்கனா 5 சதவீதம் மட்டுமே எடுத்தார்,” என பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.