Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இஷாவுக்கு எம்.பி.,யாகும் ஆசை?

28 ஜன, 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Isha-gopikar-joints-in-BJP

விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா', விஜய் நடித்த 'நெஞ்சினிலே', பிரசாந்த் நடித்த 'ஜோடி' உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தவர் இஷா கோபிகர். அவருக்கு வெகு நாட்களாகவே, நடிகைகள் குஷ்பு மற்றும் நக்மாவைப் போல பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்பது ஆசையா இருந்திருக்கிறது.

பார்லிமெண்ட் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவர், மகாராஷ்டிராவில் நடந்த பா.ஜ., விழா ஒன்றுக்கு வந்திருந்த, மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், தன்னை பா.ஜ.,வில் இணைத்து கொண்டிருக்கிறார். அவரை, வரும் பார்லிமெண்ட் தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளும் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியலில் களம் இறங்கி, பெங்களூரு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி விட்டார். ஆட்டோவிலேயே சென்று, அவர் இரு நாட்கள் பிரசாரத்தையும் முடித்து விட்டார். அடுத்தகட்டமாக, நடிகர் நாகார்ஜுனாவும், நடிகர் மோகன்லாலும், அரசியலில் களம் இறங்கி பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை இஷா கோபிகர், திடுமென பா.ஜ.,வில் இணைந்திருப்பது, பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்துத்தானோ என்ற சந்தேக எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவன் பட ரீமேக்கில் மகனை அறிமுகப்படுத்தும் பாலிவுட் நடிகர்செல்வராகவன் பட ரீமேக்கில் மகனை ... ஷாருக்கானின் 25 ஆண்டு மனக்குறை தீருமா? ஷாருக்கானின் 25 ஆண்டு மனக்குறை தீருமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in