Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நீதிமன்றத்தில் ஆஜராக ஷில்பா ஷெட்டிக்கு சம்மன்

23 ஜன, 2019 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Court-send-summoun-to-Shilpa-Shetty

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் தான். திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட ஷில்பா ஷெட்டி, தற்போது பணம் திருப்பி செலுத்தாத வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் ஜனவரி 29 ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வரும் பர்ஹத் அம்ரா என்பவர் தான் இந்த வழக்கை தொடுத்துள்ளார். ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டி தன்னிடம் 21 லட்ச ரூபாய் கடனாக பெற்றிருந்தார் என்றும், அவரது மறைவைத் தொடர்ந்து அந்த பணத்தை ஜனவரி 2017ல் வட்டியுடன் திருப்பி செலுத்துவதாக அவரது குடும்பம் உத்தரவாதம் அளித்தனர் என்றும், ஆனால் சொன்னபடி அதை திருப்பி செலுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, வரும் ஜனவரி 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஷில்பா ஷெட்டி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஷில்பா ஷெட்டி இது குறித்து கூறும்போது, தனது தந்தையின் வியாபார விஷயங்களை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தற்போது புகார் அளித்துள்ள பர்ஹத் அம்ரா என்பவரை தங்களுடைய குடும்ப கார் மெக்கானிக்காக மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் இயக்கம்ஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் ... ரூ.400 கோடி வசூலை நெருங்கும் 'சிம்பா' ரூ.400 கோடி வசூலை நெருங்கும் 'சிம்பா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,இந்தியா
24 ஜன, 2019 - 08:32 Report Abuse
Manian பணம் ஏராளமாக இருந்தாலும், இப்படியும் நடிக்கணுமா? மேனாமிக் என்றாவது சொன்னது சரி. ஆனால் கடனை திருப்ப தருகிறோம் என்று சொல்லவில்லை என்று ஏன் சொல்லவில்லை. பேராசை பெரு நாசத்தில் முடியும். குடும்பம் விளங்காது . .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in