வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ரன்வீர் சிங், சாரா அலிகான் மற்றும் பலரது நடிப்பில், கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி வெளிவந்த படம் 'சிம்பா'. தெலுங்கில் வெளிவந்த 'டெம்பர்' படத்தின் ரீமேக் தான் இந்தப் படம்.
படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடியைக் கடந்தது. வருடக் கடைசியில் பாலிவுட்டிற்கு வெற்றிகரமான ரூ.100 கோடி படமாக இந்தப் படம் அமைந்தது. அதற்கு முன்பு வெளிவந்த 'ஜீரோ, தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' உள்ளிட்ட சில படங்கள் ரூ.100 கோடியை வசூலித்தாலும் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. அதனால், இந்தப் படத்தின் வெற்றியை பாலிவுட் பெருமையாகக் கருதியது.
படம் வெளிவந்து 12 நாட்களுக்குள் தற்போது ரூ.200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. பாலிவுட் வரலாற்றில் ரூ.200 கோடி ரூபாய் வசூலைக் கடந்த 18வது படம் என்ற பெருமையை 'சிம்பா' பெற்றுள்ளது.
இன்னும் ரூ.10 கோடி வசூலித்திருந்தால் அந்த இடத்தை '2.0' படம் பெற்றிருக்கும் என்பது கூடுதல் தகவல்.