Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கிரிக்கெட்டர்களை நெளிய வைத்த கரண்!

09 ஜன, 2019 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Cricket-players-in-Koffee-with-Karan

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'காபி வித் கரண்' என்ற தலைப்பின் கீழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக இரு கிரிக்கெட்டர்களை விருந்தினர்களாக்கி இருந்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்களான பேட்ஸ்மேன், கே.எல்.ராகுலும், ஆல்ரவுண்டர் ஹிர்த்திக் பாண்டியாவும் தான், அந்த விருந்தினர்கள்.

சங்கடத்தில் நெளியக் கூடிய பல கேள்விகளோடு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் கரண் ஜோகர். எடுத்த எடுப்பிலேயே, அவர் நடிகை இஷா குப்தாவோடு இருக்கும் தொடர்பு குறித்து ஹிர்த்திக் பாண்டியாவிடம் கேட்டு விட்டார்.

அதற்கு பதில் அளித்த ஹிர்த்திக், 'இப்படிப்பட்ட கேள்விகள் எனக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சொல்கிறேன். நடிகை இஷா குப்தாவோடு, நல்ல பழக்கம் இருக்கிறது. நண்பர்கள் என்ற முறையில் நாங்கள் எங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு செல்கிறோம். மற்றபடி, எல்லா விஷயங்களிலும் இருக்கும் ஆழமான முரண்பாடுகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், சமூக வலைதளங்களில் எங்களைப் பற்றி மோசமாக விமர்சிக்கின்றனர். ஏற்கனவே, நடிகை இஷா குப்தாவும், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள் புரியாமல் ஆளாளுக்கு, ஒருவரை மற்றவரோடு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்' என்று கூறினார்.

அடுத்ததாக கே.எல்.ராகுல் மற்றும் ஹிர்த்திக் பாண்டியா இருவரிடமும் கரண் ஜோகர் கேட்ட கேள்வி, இருவரையுமே கடுமையான தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கியது. இருந்தாலும் அவர்கள் இருவரும் துணிச்சலாக அதற்கு பதில் அளித்தனர். கரண் ஜோகர் கேட்ட கேள்வி - 'விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர். இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்?' சிறிது நேரம், தர்ம சங்கடத்தில் நெளிந்த ராகுலும், ஹிர்த்திக்கும் சொன்ன பதில் - 'விராட் கோலி'.

இப்படி இவர்கள் விராட் கோலி என ஓபனாக சொன்னதை அடுத்து, சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள், ராகுலையும், ஹிர்த்திக்கையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹிருத்திக் ரோஷனின் தந்தைக்கு புற்றுநோய் ஆபரேஷன்ஹிருத்திக் ரோஷனின் தந்தைக்கு ... ரூ.200 கோடியைக் கடந்த 'சிம்பா' ரூ.200 கோடியைக் கடந்த 'சிம்பா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
11 ஜன, 2019 - 13:47 Report Abuse
Sathish பிரபலம் ஆனால் இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். சும்மாவா? நூறு ருபாய் சம்பாதிப்பதற்கு நாள் பூராவும் வெயிலில் கஷ்டப்படும் மக்கள் இருக்கும் நாட்டில் லட்ச லட்சமாய் வாங்குகிறார்களே பதில் சொல்ல என்ன கேடு. கரண் ஜோகர் மேல் எந்த தவறும் இல்லை. அதனால்தான் அவரின் நிகழ்ச்சிக்கு அவ்வளவு வரவேற்பு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in