அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ராணி முகர்ஜி. நடிகர் கமலுடன் இணைந்து ஹேராம் படத்தில் நடித்தவர். தான் என்ன நினைக்கிறாரோ, அதை ஓபனாக தெரிவிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களை, வெளியுலகிற்கு அடையாளம் காட்டும் இயக்கமாக மாறி இருக்கும் மீ டூ குறித்து, பலரும் பலரது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இது குறித்து நடிகை ராணி முகர்ஜி கூறியிருப்பதாவது: பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களின் செயல்பாடுகளை, எங்கே வெளிப்படுத்தினாலும் அவர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள். பெண்கள்தான் மாறிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஆண்களின் செயல்பாடுகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பெண்கள் தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர் கருத்துக்களும் வேகமாக வந்து விழுகின்றன. பாலியில் சீண்டலில் ஈடுபடும் ஆண்களும் தற்காப்பு கலை கற்று தேர்ந்திருந்தால் என்ன செய்வது? என்று கேட்டு, ராணி முகர்ஜியை பலரும் கலாய்க்கின்றனர்.