Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

3 நாளில் 100 கோடி வசூலித்த 'சிம்பா'

02 ஜன, 2019 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Simba-collects-Rs.100-crore-in-3-days

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் 'டெம்பர்'. லஞ்ச, லாவண்யத்தில் திளைத்த போலீஸ் அதிகாரி, கடத்தல்காரர் ஒருவருடன் நெருக்கமாக உள்ளார். தனது சகோதரர்கள் செய்த கொலை ஒன்றின் ஆதாரத்தை வைத்திருக்கும் பெண் ஒருவரைக் கொல்ல நினைக்கிறார். அப்படிப்பட்ட கடத்தல்காரருடன் பழக்கம் வைத்திருக்கும் போலீஸ் அதிகாரியை அவருடைய காதலி, ஆதாரத்தை வைத்திருக்கும் பெண், ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் எப்படி திருத்துகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தை ஹிந்தியில் 'சிம்பா' என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டார்கள். ரன்வீர் சிங், சாரா அலிகான், சோனு சூட் மற்றும் பலர் நடிக்க 'சென்னை எக்ஸ்பிரஸ்' புகழ் ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் மூன்றே நாளில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவில் 70 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 30 கோடி ரூபாயும் வசூலித்து 2018ம் ஆண்டின் கடைசி 100 கோடி ரூபாய் படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய 8வது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் இயக்குனர் ரோகித் ஷெட்டி. 'சிம்பா' படத்திற்கு முன்பாக ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த 'ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன. தீபிகா படுகோனேவுடன் திருமணம் ஆன பின் ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த படம் சிம்பா. 2018ல் ரன்வீர் சிங், தீபிகா நடித்து வெளிவந்த 'பத்மாவத்' படமும் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. இந்த ஜோடி இதற்கு முன் இணைந்து நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' 184 கோடியும், 'ராம் லீலா' 116 கோடியும் வசூலித்துள்ளது. ரன்வீர் சிங்கின் நான்கு 100 கோடி படங்களில் மூன்று படங்களில் தீபிகா தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.100 கோடி படங்கள் 13 : பாலிவுட் சாதனைரூ.100 கோடி படங்கள் 13 : பாலிவுட் சாதனை கவர்ச்சியில் அதிரவைக்கும் திஷா கவர்ச்சியில் அதிரவைக்கும் திஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in