வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்தது, ஹிந்தித் திரையுலகம் தான். வருடா வருடம் பல படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டி வருகின்றன. அதில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு 2018ம் ஆண்டு 13 ஹிந்தித் திரைப்படங்கள் 100 கோடி வசூலைக் கடந்து ஓடியிருக்கின்றன. அதில் தமிழிலிருந்து ஹிந்தியில் டப்பிங் ஆன '2.0' படம் 188 கோடி ரூபாய் வசூலைப் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
'சஞ்சு' படம் 342 கோடி ரூபாய் வசூலைப் பெற்று முதலிடத்திலும், 'பத்மாவத்' படம் 302 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது. 4வது இடத்தில் ''ரேஸ் 3' (166 கோடி), 5வது இடத்தில் 'பாகி 2' (164 கோடி), 6வது இடத்தில் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' (151 கோடி), 7வது இடத்தில் 'பதாய் ஹோ' (137 கோடி), 8வது இடத்தில் 'ஸ்த்ரீ' (129 கோடி), 9வது இடத்தில் 'ராஸி' (128 கோடி), 10வது இடத்தில் 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' (108 கோடி), 11வது இடத்தில் 'கோல்டு' (104 கோடி), 12வது இடத்தில் 'ரெய்ட்' (103 கோடி), 13வது இடத்தில் 'சிம்பா' (100 கோடி)” இடங்களைப் பெற்றுள்ளன. இந்த 13 படங்களால் மட்டுமே 2,122 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் 510 கோடி வசூலைப் பெற்று 500 கோடி கிளப்பில் இடம் பெற்ற முதல் ஹிந்திப் படமாக அமைந்தது. அது ஒரு டப்பிங் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டில் நேரடி ஹிந்திப் படம் ஒன்று அந்த 500 கோடி கிளப்பில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 2019ல் அந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.