இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் | மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி |
ஒட்டவா: பழம்பெரும் பாலிவுட் நடிகர் காதர்கான்,81, ஹிந்தி திரையுலகில் காமெடி நடிகர், குணச்சித்தர நடிகர், வசன கர்த்தா என பன்முக திறமை கொண்டவர் காதர்கான். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்கள் அமிதாப் பச்சன் நடித்தவை. மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு, காலமானார்.
அவரது மகன் சர்பரஸ் வெளியிட்ட அறிக்கையில், எனது தந்தை எங்களை விட்டு சென்று விட்டார். கனடா நேரப்படி, டிச.,31 மாலை 6 மணியவில் அவர் காலமானார். அவரது இறுதிச்சடங்கு கனடாவிலேயே நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் இங்கு தான் உள்ளோம். எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. என தெரிவித்திருக்கிறார்.