சாகுந்தலம் வேடத்தில் நடிக்க பயந்த சமந்தா | விஷ்ணு விஷாலின் பதிவால் ரசிகர்கள் குழப்பம் ; அவரே தந்த விளக்கம் | விஜய்யின் லியோ படத்தில் இணையும் பஹத் பாசில் | அஜித் 62வது படத்தின் அறிவிப்பு தள்ளிப்போகிறது | எனது முதல் ஆஸ்கர் விருது ராம் கோபால் வர்மா : இசையமைப்பாளர் கீரவாணி தகவல் | கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ காட்சி வெளியானது : அதிர்ச்சியில் படக்குழு | அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா, கார்த்தி : நேரில் சென்று ஆறுதல் | பொன்னியின் செல்வன் இசை வெளியீடு : கமல், சிம்பு பங்கேற்பு | மோகன் ஜி இயக்கத்தில் பிரஜின் தவறவிட்ட பட வாய்ப்பு | ‛என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், சமாளிக்க முடியாது' : பாலாஜி முருகதாஸ் டுவீட் |
பிரபல இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. தமிழ் படங்களிலும் நடித்து, தமிழ் பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். அவருக்கு திடீரென கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடைந்து போன நிலையில் இருந்த மனிஷாவை தேற்றி, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதில், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார்.
பின், இந்தியாவுக்குத் திரும்பிய அவர், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். மீண்டும் பிஸியான நடிகையாகி இருக்கும் மனிஷா, தன்னுடைய வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். குறிப்பாக, தான் கேன்சர் பாதிப்புகளில் இருந்து மீண்டது குறித்தெல்லாம் புத்தகம் எழுத முடிவெடுத்து, 'healed' என்ற தலைப்பில், தெளிவாக எழுதி இருக்கிறார். அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கைக் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அதில், அவர் எழுதி இருப்பதாவது:
இடைவிடாமல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன். நடிப்பு... நடிப்பு... நடிப்பு இவை தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஒரே ஓட்டமாக ஓடியதால், உள்ளமும்; உடலும் பலவீனப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் ஓடினேன். பின், ஒரு கட்டத்தில், கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஓய்வில்லாமல் சினிமாவில் ஓடியதால், உலகமே என் காலடிக்கு கீழே இருப்பதை போன்றே உணர்ந்தேன். பின் தான், அதெல்லாமே மாயை என்று உணர்ந்தேன். தற்போது, கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டாலும், ஒரு விதத்தில், அது என் அகந்தையை இல்லாமல் செய்து விட்டது.
இவ்வாறு மனிஷா கொய்ராலா புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.