டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் ரஜினி, அக்சய் குமார் இணைந்து நடித்து, ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.O படம் வெளியானது. வசூல் ரீதியாக பலரும் பல விபரங்களை கூறினாலும், பட தயாரிப்பளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சுமார் 5௦௦ கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இன்னும் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதேசமயம் இந்தியை பொறுத்தவரை இதுநாள் வரை ஒரு தமிழ் டப்பிங் படம் வசூலித்த தொகையிலேயே அதிகமான தொகையை வசூலித்துள்ள சாதனைக்கும் இந்தப்படம் சொந்தமாகியுள்ளது. இதைவிட ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், அக்சய் குமார் இதுவரை நடித்த படங்களிலேயே அதிகமான வசூல் ஈட்டிய படமும் 2.O தானாம். அந்தவகையில் ஒரு தமிழ்ப்படம் பாலிவுட் நடிகர் ஒருவருக்கு சாதனை படைக்க உதவி இருப்பது உண்மையிலே புதிய விஷயம் தான்.