மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் 2 நாட்கள் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் திருமணத்தை அமெரிக்க இணையதளம் ஒன்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடிக்கவும், ஹாலிவுட்டிலேயே செட்டிலாகவும் திட்டமிட்டு ஜோன்சை காதலிக்க வைத்து கட்டாய திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நிக் ஜோன்ஸ், பிரியங்கா காதலில் உண்மை இல்லை. பணமும், தொழிலுமே பிரதானமாக இருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா. "இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை. இதுபோன்ற விஷயங்கள் என்னை பாதிக்காது. நான் இப்போது மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன். அதை கெடுக்க யார் நினைத்தாலும் நடக்காது" என்று கூறியிருக்கிறார்.